4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம்

  |   Chennainews

சென்னை: அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் நடைபெறவிருந்த மாநில செயற்குழு கூட்டத்திற்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததை கண்டித்து அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவர்கள் சங்கத்தின் கூட்டமைப்பின் சார்பில் தகுதிக்கேற்ப ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி முதல் அரசு மருத்துவர்கள் சார்பில் காலவரையற்ற உண்ணாவிரதம் நடைபெற்றது. அதன் பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கோரிக்கைகளை இரண்டு மாதங்களுக்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இந்த நிலையில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் சென்னையில் உள்ள ரஜீவ்காந்தி மருத்துவமனையில் அடுத்தகட்ட போராட்டத்தை குறித்து ஆலோசிப்பதற்கான கூட்டம் நடத்த அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் திட்டமிடப்பட்டது. அதன்படி இன்று மருத்துவமனை வளாகத்திற்குள் மருத்துவர்கள் வந்தபோது கூட்டம் நடத்த மருத்துவமனை நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை கண்டித்து 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் பாலகிருஷ்ணன் இம்மாத 24ம் தேதி மாலைக்குள் மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று சுகாதாரத்துறையின் சார்பில் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.

போட்டோ - http://v.duta.us/RAfSdAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/XNzjVwAA

📲 Get Chennainews on Whatsapp 💬