அழிவின் பிடியில் அதிசயப் பறவை! - பாதுகாக்கப்படுமா பாறு கழுகுகள்?

  |   Coimbatorenews

சுற்றுச்சூழல், சுகாதாரத்தை காக்க பல்லாயிரம் கோடி செலவிடும் நிலையில், இறந்த விலங்குகளை உண்டு, வனத்துக்கும், சுற்றியுள்ள பகுதிக்கும் சூழல் பாதுகாப்பு வழங்கும் பாறு கழுகு எனப்படும் 'பிணம் தின்னிக் கழுகு' வகையைப் பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

கிராமப் பகுதிகளில் இறந்து கிடக்கும் விலங்குகளை, கூட்டமாக பாய்ந்து வரும் பாறு கழுகுகள், சில மணி நேரத்துக்குள் எலும்பைத் தவிர, மற்றெல்லாவற்றையும் தின்று, தூய்மைப் படுத்திவிட்டுச் சென்றுவிடும். காட்டில் நீர்நிலைகளுக்கருகில் விலங்குகள் இறக்க நேர்ந்தால், அதிலிருந்து நோய் பரப்பும் நுண்ணுயிரிகள் தண்ணீரில் கலந்து, தாகம் தணிக்க வரும் இதர விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்.

இதிலிருந்து விலங்குகளைக் காக்கும் பெரும்பங்கு பாறு கழுகுகளைச் சேரும். ஆனால், தற்போது பாறு கழுகுகள் இல்லாததால், நாய்களும், எலிகளும் இந்தப் பணியை மேற்கொள்கின்றன. வெறி நாய்களால் இந்தியாவில் ஆண்டுக்கு 30,000 பேர் இறக்க நேரிடுகின்றது.

பாறு கழுகுகள் கோமாரி நோய் தாக்கி இறந்த விலங்கை உண்டாலும், நாள்பட்ட அழுகிய இறைச்சியை உண்டாலும், தொற்று நோய்வாய்ப்பட்டு இறந்த கால்நடைகளை உண்டாலும், அவைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை....

போட்டோ - http://v.duta.us/T8yMJwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/Hf5RywAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬