🗳உள்ளாட்சி தேர்தல்-📆நாளை முதல் 📜தேமுதிக விருப்பமனு விநியோகம்🎊

✍இளவேனில்🌄

🏛தமிழகத்தில் 🗳உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் ⭐விஜயகாந்த் விருப்பமனுக்களை பெற்று கொள்வது குறித்து அறிவிப்பு🔈 வெளியிட்டுள்ளார். அதன் படி, "நாளை முதல் 🗳உள்ளாட்சி தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழத்தின் சார்பில் போட்டியிட🎉 விரும்புகின்ற அனைத்து 👥நிர்வாகிகளும், 👥கழக தொண்டர்களும் 🗳உள்ளாட்சி தேர்தல் விருப்ப 📜மனுக்களை நாளை (வெள்ளிக்கிழமை) காலை ⌚10 மணியளவில் இருந்து அந்தந்த மாவட்ட கழக தலைமை 🏢அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்👍" என்றும், "அதையடுத்து ✍பூர்த்தி செய்யப்பட்ட 📜விருப்ப மனுக்களை வரும் 📆25ம் தேதி திங்கட்கிழமை மாலை ⌚5 மணிக்குள் மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்😯" என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், 🗳உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய 📜விருப்ப மனு அளிப்பதற்கும் தேமுதிகவின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள்😐 எனவும் கூறியுள்ளார்🗣.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬