👩ஐஐடி மாணவி தற்கொலை😨-👮காவல் ஆணையர் நேரில் விசாரணை🗣

✍இளவேனில்🌄

🏛கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த 👩பாத்திமா லத்தீம் சென்னை 🏢ஐஐடியில் 📚இளங்கலை முதலாம் ஆண்டு மானுடவியல் படித்து வந்தார்😯. கடந்த 📆9ம் தேதி ஐஐடி வளாகத்தில் உள்ள சரயு விடுதியில் தூக்கில் தொங்கியபடி😳 இவர் சடலமாக மீட்கப்பட்டார். மன அழுத்தத்தால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட🗣 நிலையில், அவரது 📲செல்போன் குறுஞ்செய்தியில் மத ரீதியாக பேராசிரியர் 👤சுதர்சன் பத்மநாபனால் துன்புறுத்தலுக்கு ஆளானதாக 👩மாணவி குறிப்பிட்டிருந்ததாக அவரது பெற்றோர் 😡குற்றம்சாட்டினர். இது தொடர்பாக கேரள முதலமைச்சர் 💺பினராயி விஜயனிடமும் அவரது பெற்றோர் புகார் தெரிவித்ததை🔈 அடுத்து விசாரணை🗣 தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் சென்னை ஐஐடி வளாகத்திற்கு நேரில் சென்ற சென்னை மாநகர காவல் ஆணையர் 👮ஏ.கே.விஸ்வநாதன் 👤பேராசிரியர் பத்மநாபனிடம் விசாரணை🗣 மேற்கொண்டார். அதன் பின்னர் அவர் அளித்த பேட்டியில்🎙, "🤵சிபிஐ-ல் பணியாற்றியவர் தலைமையில் 👥சிறப்புக்குழு அமைக்கப்பட்டு👍, உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் விசாரணை🗣 நடைபெறும்😐" என்றும், "போலீஸ் அதிகாரி 👮ஈஸ்வர மூர்த்தி தலைமையில் புலன் விசாரணை நடைபெறும்🤨" என்றும் தெரிவித்தார்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬