கோவையில் காட்டுக்குள்ளே ஒரு சென்ட் ஃபேக்டரி; பயத்தில் உள்ளூர் பொது மக்கள்

  |   Coimbatorenews

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் செல்ல வேண்டுமென்றால் அதற்குரிய வனத்துறை அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். அதற்கான முறையான காரணத்தையும் தெரிவிக்க வேண்டும். வனத்திற்குள் நடைபயணம் மேற்கொள்ளவோ, குறிப்பிட்ட பகுதிக்கு சென்று சுற்றிப் பார்க்கவோ, ஆராய்ச்சி செய்யவோ அனுமதிக்கப்பட்டால் உங்களுடன் பாதுகாப்புக்காக ஓரிரு வேட்டைத் தடுப்புக்காவலர்கள் அனுப்பி வைக்கப்படுவர்.

அப்படி செல்லும்போது அந்த வேட்டைத் தடுப்புக் காவலர்கள் தன் கையில் ஒற்றை அரிவாளுடன் வருவதை காணலாம். அந்த அரிவாளும் சிறிய அளவில் ஒரு வெட்டு வெட்டினால் ஒரு மரத்தை கூட வெட்டத்தக்கதாக இல்லாத மொண்ணையாக இருப்பதையும் கவனிக்கலாம். 'இதை வைத்துக் கொண்டு இவர் எப்படி சிறுத்தை மற்றும் யானைகளிடம் நம்மை பாதுகாப்பார்?' என்ற கேள்வியும் அதை முன்வைத்தே நம் மூளைக்குள் சுடர்விடும்.

நீங்கள் அந்த வேட்டைத் தடுப்புக் காவலரிடம், அல்லது உடன் அரிவாளுடன் வரும் பழங்குடி நபரிடம், 'இந்த அரிவாளை வைத்து யானையை விரட்ட முடியுமா?' என்று கேட்டுப் பாருங்கள். 'இதை வச்சு ஒண்ணுமே பண்ண முடியாதுங்க. யானைய பார்த்தா அப்படியே அசையாம நின்னுக்கணும். அதையும் மீறி யானை நம்மை பார்த்து வந்தா ஆளுக்கொரு பக்கமா ஓடத்தான் வேண்டும்!' என்பார் கூலாக....

போட்டோ - http://v.duta.us/cASBTgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/vLGmIAAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬