🏛டெல்லியில் மிக மோசமான நிலையை😨 எட்டிய காற்று மாசு😟

✍இளவேனில்🌄

🏛தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து மோசமான நிலையிலேயே😨 இருந்து வருகிறது. இன்று காலை 🏛மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட தகவலின்படி🗣, லோதி சாலை🛣 பகுதியில் மாசுக் காரணிகளான பி.எம். 2.5 மற்றும் பி.எம்.10 ஆகியவற்றின் தரக்குறியீட்டு எண் 500-ஆக பதிவாகியிருந்தது😯. இது காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளதை😳 குறிப்பதாகும். தரக்குறியீட்டு எண் 50-ற்குள் இருந்தால் மட்டுமே சுவாசிக்க ஏற்றது😐 என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, நகரின் பல்வேறு பகுதிகளிலும், புகைமூட்டம் அதிகமாக இருந்ததால், 🚗வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு😟 ஆளாகினர். இந்த நிலையில், காற்று மாசு குறையாத சூழலில் 📆2 நாட்களுக்கு டெல்லி 🏫பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது📣. மேலும், 🏛டெல்லிக்கு உட்பட்ட மாவட்டங்களில் புகையை வெளியேற்றும் 🏭தொழிற்சாலைகள், கல் குவாரிகள் உள்ளிட்டவை 📆நவம்பர் 15ம்தேதி வரை 🔒மூடியிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது⚖.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬