தொட்டியில் வளர்க்கக்கூடிய 10 செடிகள்!!!
காய்கறிகளின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. நடுத்தரக் குடும்பத்தினர் காய்கறிப் பயன்பாட்டினைக் குறைத்துக் கொள்ளும் அளவிற்கு விலைகள் அதிகரித்து கொண்டிருக்கின்றன. நாமே விளைவித்தால் தான் உண்டு என்னும் அளவிற்கு காய்கறிகளின் விலைகள் உள்ளன. மேலும் நாமே நமது சொந்தத் தோட்டத்தில் காய்கறிகள், பூக்கள் மற்றும் மூலிகைகளை வளர்த்துப் பயன்படுத்தினால், அதனால் வரும் ஆனந்தமும் பெருமையும் அளவிட முடியாதது. ஆனால் எல்லோராலும் தோட்டம் அமைக்க முடியுமா???
அதற்கு தண்ணீர் வசதியும், தகுதியான தரமான மண்ணும், போதுமான நிலமும் இருக்க வேண்டும். ஆயினும், தோட்டம் போடுவதற்குத் தகுந்த நிலம் இல்லை என்பதற்காக தோட்டமே போட முடியாது என்று அர்த்தமல்ல. அடுக்கு மாடி வீடுகளில் வசிப்பவர்களுக்காகவும், தோட்டம் போட சரியான மண் வளம் இல்லாத நிலம் வைத்திருப்பவர்களுக்காகவும் உருவானவை தான் தொட்டித் தோட்டங்கள். செடிகள் வளர்ப்பதற்கு ஏற்றவாறு தொட்டிகள் பல வண்ணங்களிலும், பல வடிவங்களிலும் கிடைக்கின்றன. மலர்களுக்காக, காய்கறிகளுக்காக, மூலிகைகளுக்காக என்று தனித்தனி தொட்டிகளுடன் தோட்டம் அமைத்து வனப்பை உண்டாக்கலாம் அல்லது அனைத்துத் தாவரங்களும் கலந்திருக்கும் வண்ணம் ஒரு கலப்புத் தோட்டத்தினை அமைக்கலாம். வீட்டு மாடியில், பால்கனியில், தொட்டித் தோட்டம் அமைப்பதற்கு ஏதுவான பத்து வகைத் தாவரங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!...
போட்டோ - http://v.duta.us/2FOdDgAA
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/8_Aw5wAA