தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகா அணை கட்டுவதைத் தடுக்க தொடர் சட்ட நடவடிக்கை தேவை: டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

  |   Chennainews

சென்னை: தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகா அணை கட்டுவதைத் தடுக்க தொடர் சட்ட நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக டி.டி.வி. தினகரன் இன்று வெளியிட்ட அறிக்கையில், கர்நாடகாவின் நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணையாறு, அந்த மாநிலத்தில் 112 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே பாய்கிறது. தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 320 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த நதி ஓடி வருகிறது.

இதன் மூலம் தென்பெண்ணை ஆற்றினால் மேற்கண்ட மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரத்திற்கும் துணை புரிகிறது. இந்நிலையில் காவிரியின் துணை ஆறுகளில் எல்லாம் அணைகளைக் கட்டி தமிழகத்திற்குத் தண்ணீர் விடாமல் செய்து வரும் கர்நாடகா, தென்பெண்ணை ஆற்றின் முக்கிய துணை ஆறான மார்க்கண்டேய நதியின் குறுக்கே 50 மீட்டர் உயரத்தில் புதிய அணையினைக் கட்டி வருகிறது. தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடக மாநிலம் யார்கோட் என்ற இடத்தில் எழுப்பப்படும் இந்த அணைக்கு எதிராக தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது....

போட்டோ - http://v.duta.us/aEWsFQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/dc3EPAAA

📲 Get Chennainews on Whatsapp 💬