🏛தமிழகம் முழுவதும் 🌞திமுக சார்பில் 📜விருப்ப மனு விநியோகம்👍

✍இளவேனில்🌄

🏛தமிழகத்தில் 🗳உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பினை மாநில தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது👀. இந்நிலையில் திமுக சார்பில் 🗳உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான 📜விருப்பமனு 📆14ம் தேதி முதல் விநியோகிக்கப்படும்🎉 என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்🔈. அதன்படி 📆14ம் தேதியான இன்று 🏛சென்னை உட்பட தமிழகம் முழுவதும், 🌞திமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் நடைபெற்று வருகிறது. உள்ளாட்சித்தேர்தலில் திமுக சார்பில் மாநகர மேயர், நகராட்சி தலைவர், மாநகராட்சி கவுன்சிலர், நகராட்சி கவுன்சிலர், ஊராட்சி உறுப்பினர் போன்ற பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோருக்கு, இன்று துவங்கி🎉 வரும் 📆20ம் தேதி வரை 📜விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படுகின்றன😯.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬