முழுநேர போலீஸ்... பகுதிநேர இயக்குநர்... கோவையைக் கலக்கும் ராக்கி மகேஸ்!

  |   Coimbatorenews

"தொடர்ந்து நடக்கும் சாலை விபத்துகளால், நான் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தேன். அதனால்தான், விழிப்பு உணர்வு குறும்படங்களை இயக்கி வருகிறேன்'' இப்படிச் சொல்பவர் ஒரு சமூக ஆர்வலர் இல்லை... கோவை டிராஃபிக் போலீஸான ராக்கி மகேஸ்.

ரியலிலும், ரீலிலும் நாம் எத்தனையோ வித போலீஸ்களைப் பார்த்திருப்போம். ஆனால், அவர்களிடமிருந்து சற்று ஒதுங்கி, துப்பாக்கிகளுக்கும், லத்திகளுக்கும் குட்பை சொல்லிவிட்டு, கேமராவுடன் விழிப்பு உணர்வு குறும்படங்களை எடுத்துவருகிறார் ராக்கி மகேஸ் என்ற கோவை டிராஃபிக் போலீஸ்.

ராக்கி மகேஸிடம் பேசினோம், "சின்ன வயசுலருந்தே சமூகப் பணிகள் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அதிகம். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு கீழ் ஓர் அங்கமாக இருக்கும், நேரு யுவகேந்திரா அமைப்பில் இருந்தேன். சமூகம் குறித்தப் பார்வையை நான் அங்குதான் கற்றேன். அப்போதே, தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி, சேலத்திலிருந்து டெல்லிக்கு சைக்கிள் பயணம் செய்தோம்.

போலீஸ் வேலைக்கு வர்றதுக்கு முன்னாடி, பஸ்ல கண்டக்டராகவும், டிரைவராகவும் இருந்தேன். அந்த நேரத்துல, நிறைய கதைகள் எழுதுவேன். டிராமா போடுவோம். எம்.ஏ போலீஸ் அட்மினிஸ்ட்ரேசன் படிச்சேன். 1994 ஆம் ஆண்டு போலீஸ்ல சேர்ந்தேன். போலீஸ்ல சேர்ந்த அப்பறம், நான் எழுதின கதைகளை புக்கா ரிலீஸ் பண்ணோம். 'புகுந்த வீட்டைப் புரிந்துகொள் மருமகளே' என்ற சிறுகதைகள் தொகுப்பை வெளியிட்டோம்....

போட்டோ - http://v.duta.us/fiSWugAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/hPcAcQAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬