கோவையில் மெட்ரோ ரயில்; உத்தேச வழித்தடங்கள் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது

  |   Coimbatorenews

கடந்த 2017-ம் வருடம் நடந்த சட்டசபை கூட்டத்தில் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும் என முதலமைச்சர் அறிவித்தார், அதன்படி கோவையில் மெட்ரோ ரயில் அமையும் பற்றிய சாத்திய கூறுகள் பற்றிய ஆய்வுகள் நடந்து வந்தது. இதன் விளைவாக தற்போது உத்தேசமாக மெட்ரோ ரயில் செல்லவேண்டிய வழித்தடங்கள் ஆராயப்பட்டு, இதன் அறிக்கை தற்போது அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள உத்தேச வழித்தடங்கள்....

மொத்த தூரம்: 136 கி.மீ., நீளம்

** உக்கடத்தில் இருந்து கணியூர் வரை 26 கி.மீ.,

** உக்கடத்தில் இருந்து பெரியநாயக்கன்பாளையம் அருகே பிளீச்சி வரை 24 கி.மீ.,

** தடாகம் சாலை, தண்ணீர் பந்தல் முதல் கருமத்தம்பட்டி வரை 42 கி.மீ.,

** காருண்யா நகர் முதல் அன்னுார் கணேசபுரம் வரை 44 கி.மீ.,

என, மேற்கண்ட 4 உத்தேச வழித்தடங்களில், திட்டத்தை செயல்படுத்தலாம் என, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சென்னையில் இயங்கிவரும் மெட்ரோ ரயில் அமைத்த சேவை நிறுவனம் தான் கோவையிலும், மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை மேற்கொள்ள உள்ளது. இந்த உத்தேச அறிக்கையினை அரசு உறுதி செய்தால் இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு, உத்தரவு பிறப்பிக்கப்படும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

போட்டோ - http://v.duta.us/tlN5wwEA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/Jbj3mgAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬