கோவை மக்களுக்குக் கிடைத்த அரிய வரப்பிரசாதம் - சிறுவாணி அணைக்கட்டு

  |   Coimbatorenews

பவானி நதியின் துணைநதியான சிறுவாணி கேரளத்தில் பாலக்காடு மாவட்டத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகிறது. அங்கு அட்டப்பாடி பள்ளத்தாக்கு வழியாக வடகிழக்கே ஓடி நீலகிரி மலையடிவாரத்தில் உள்ள மேட்டுப்பாளையத்திற்கும் மேற்கே பவானியுடன் கலக்கிறது. இந்த சிறுவாணி ஆற்றில் ஒரு சிறு அணைகட்டி அந்த அணையில் தேங்கிய நீரை ஒரு குகை மூலம் மலையின் மறுபுறம் அதாவது கிழக்குப் பக்கம் கொண்டு வந்து கோவை நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது

சிறுவாணி அணையின் கட்டுமானப்பணி

சிறுவாணி அணையின் கட்டுமானப்பணி 1927 - தொடங்கப்பட்டு 1931-ல் முடிக்கப்பட்டது. அணையின் உயரம் 23 அடிகளாகும். நகர வளர்ச்சி, மக்கள்தொகைப் பெருக்கம் இவற்றின் காரணமாக ஏற்பட்ட குடிநீர்ப் பற்றாக்குறையைப் போக்க இந்த அணைக்குக் கீழே 2.2 கி.மீட்டர் தொலைவில் மூத்திகுளம் நீர்வீழ்ச்சி நீர், கோபி ஆறு, அணசோலை ஆறு மற்றும் பட்டி ஆறு ஆகியவற்றின் நீர்களைத் தேக்கும் விதத்தில் 1984 - ஆம் ஆண்டு புதிய அணை கட்டப்பட்டது. இவ்விரு அணைகளிலிருந்தும் பல மில்லியன் காலன் குடிநீர் கோவை மாநகருக்கு விநியோகம் செய்யப்பட்டுகிறது....

போட்டோ - http://v.duta.us/UreBQwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/O84CwgAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬