⛰சபரிமலை வரும் 👩பெண்களுக்கு பாதுகாப்பு தர மாட்டோம்🚫

✍இளவேனில்🌄

🏛கேரள தேவசம்போர்டு மந்திரி 👤கடகம்பள்ளி சுரேந்திரன் இன்று 📰நிருபர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்🎙, "⛰சபரிமலை சீராய்வு மனு தீர்ப்பு⚖ குறித்து சட்ட நிபுணர்களுடன் 🤔ஆலோசனை கேட்டுள்ளோம். 🏛உச்சநீதிமன்ற வக்கீல்கள் பலர் சட்ட நுணுக்கங்களை தெரிவித்துள்ளனர்🗣. அதன்படி இப்போதைக்கு சபரிமலை 🏯கோவிலுக்கு 👩இளம்பெண்கள் வருவதை அரசு ஊக்குவிக்காது🚫. நாளை நடை திறக்க உள்ள நிலையில் 👩பெண்கள் கோவிலுக்கு வரவேண்டும் என்று விரும்புவதை அரசு ஆதரிக்காது❌. சபரிமலை கோவிலில் தற்போதுள்ள நிலையே தொடரும்🙄. 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சபரிமலைக்கு வந்தால் அவர்களுக்கு 💪பாதுகாப்பு தரமாட்டோம்🚫. நீதிமன்ற🏛 அனுமதி பெற்று வரும் 👩பெண்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கப்படும்😯" என்று கூறியுள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬