டாப்ஸ்லிப் முகாமில் அரிசி ராஜா; மரக்கூண்டில் அடைக்கப்பட்டது

  |   Coimbatorenews

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலை வனப்பகுதியிலிருந்து 4 மாதங்களுக்கு முன்பு தனது வழித்தடத்திலிருந்து மாறி ஊருக்குள் ஒரு காட்டு யானை புகுந்தது. ஆழியார் அணை பகுதி மற்றும் நவமலை பகுதிகளில் சுற்றித்திரிந்தது. இரவு பகுதிகளில் விவசாய நிலங்களை சேதப்படுத்தியது. பிறகு குடியிருப்பு பகுதியில் நுழைந்து வீடுகளை இடித்து தள்ளியது.

வீடுகள் மற்றும் ரேஷன் கடைகளை இடித்து அங்கிருந்த அரிசிகளை உண்டு ருசி பழகிய இந்த யானை மீண்டும் மீண்டும் இந்த குடியிருப்பு பகுதிகளுக்கு விஜயம் செய்து வந்தது, இதனால் மக்கள் இதற்கு அரிசி ராஜா என பெயர் வைத்தனர்.

இந்நிலையில் ஆழியாறு அணைக்கு அருகே உள்ள அர்த்தநாரிபாளையம் என்கிற கிராமத்தில் கடந்த 9ம் தேதி விளைநிலத்துக்குள் புகுந்தது அரிசி ராஜா யானை. பிறகு அரிசி ராஜா தாக்கியதில் விவசாயி ராதாகிருஷ்ணன், 55, இறந்தார். மே மாதம், நவமலையில், 7 வயது சிறுமி, 55, வயது பெண் இறந்தனர்.

பிறகு இந்த யானையை பிடிக்கக் கோரி பொள்ளாச்சி - வால்பாறை சாலை, அங்கலகுறிச்சி நாலுமுக்கு சந்திப்பில் மக்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் இந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க, வனத்துறையினர் திட்டமிட்டனர்....

போட்டோ - http://v.duta.us/QBsJKgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/tQfqCwAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬