தகவல் துளிகள் : ஆனைமலை மாசாணியம்மன் திருக்கோயில் :

  |   Coimbatorenews

கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலிருந்து தென்மேற்கே 15 கி.மீ தூரத்தில் ஆனைமலையிலிருந்து சேத்துமடை செல்லும் பிரதான சாலையில் மாசாணியம்மன் கோவில் நுழைவு வாயில் உள்ளது. கொடுங்கோண்மையை எதிர்க்கும் போது மாரியம்மனாய் உருவெடுக்கும் இந்த மாதேவி மாசாணியம்மனாக இருந்து மகிமை புரிகிறாள்.

இந்த கோவில் மயான மண்ணில் அமைந்திருப்பதாலும், மூலவரான அம்மனும் மயான மண்ணில் குடிகொண்டு விளங்குவதாலும் மாசாணியம்மன் என்னும் பெயர் அழைப்புப் பெயராக அமைந்து பின்னர் நிலைபெயராகிவிட்டது. 17 அடி நீளமுள்ள பெரிய உருவமாக மேற்கில் தலைவைத்து கிழக்கில் கால்கலை நீட்டி படுத்த நிலையில் காட்சி தருகிற இந்த அம்மனின் திருக் கோலமானது பார்ப்பவர்களுக்கு மெய் சிலிர்ப்பை உண்டாக்குகிறது. இங்கு வழிபாடு செய்பவர்களுக்கு பில்லி, சூனியம், மாந்திரீகம் ஏவல் கட்டு போன்றவைகளால் பாதிப்பு இருந்தால் அவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

பிறரால் வஞ்சிக்கப்பட்டவர்களும் , சொத்துக்களை பரிகொடுத்தவர்களும், திருட்டு போன்ற ஏமாற்றங்களுக்கு ஆளானவர்களும் இங்கு வந்து அம்மனின் முன்னால் நின்று முறையிட்டால் எதிராளிகள் மிகுந்த தண்டனைக்கு ஆளாகின்றனர். மாசாணியம்மன் கோவிலில் தினசரி மூன்று கால பூஜைகளும் செவ்வாய், வெள்ளி நாட்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன. தையம்மாவாசை அன்று கொடியேற்றம் செய்வித்து பதினேழாம் நாளில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி சிறப்புற நடைபெற்று வருகிறது.

போட்டோ - http://v.duta.us/jnNonAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/rBzbSgAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬