தகவல் துளிகள் : கோவையின் சிறப்பு மருதமலை

  |   Coimbatorenews

கோவையிலிருந்து வடமேற்கே 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. முருக கடவுளின் ஏழாவது படை வீடாக சிறப்பு பெற்றுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக இருக்கிற இந்த மலையின் மத்திய பகுதியில் மருதாசலக் கடவுளின் திருக்கோயில் மகிமையோடு விளங்குகிறது. அடிவாரத்தை கடந்து மேலே சற்று தூரம் சென்றவுடன் தான்தோன்றி விநாயகர் காட்சியளிக்கிறர். உளிபடாத இவரின் உன்னத தோற்றம் உள்ளத்தை உதயக்கதிராக தீண்டுகிறது. கோயிலின் வலதுபுறம் தலவிருட்சமாகிய மருதமரம் உள்ளது. மருதமலை பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

வெள்ளியங்கிரியை சிவபெருமானின் உருவமாகவும் நீலி மலையை பார்வதியின் உருவமாகவும், மருதமலை முருகனின் உருவமாகவும், ஒப்பிட்டு மும்மூர்த்திகளாகப் பேரூர் தலபுராணம் கணக்கிடுகிறது. கருவரையின் உள்ளேயிலிருந்து கிழக்கு நோக்கிய வண்ணம் தண்டாயுதம் கையில் கொண்டு அருள் ததும்பிய மருதாசல மூர்த்தி காட்சி தருகிறார் பரவசம் மிகுதியாகி ஈடு இணையில்லாத பக்தியின்பம் உள்ளத்தில் பிரவகித்து உடலெங்கும் நிறைகிறது. மருதமலை முருகனை வழிபட்டு பாம்பாட்டி சித்தர் தவம் மேற்கொண்ட குகையாகும். இது கொங்கு நாட்டு சித்தர்களின் முக்கியமானவராக விளங்கிய அவர் இந்த இறைவனின் அணுகிரம் பெற்று இங்கேயே ஐக்கியமாகிவிட்டார். தினசரி பூஜைகளும், முருக கடவுளுக்கு உகந்த நாட்களில் சிறப்பு பூஜைகளும், முக்கிய நாட்களில் நாள் முழுக்க பூஜைகளும் நடைபெறுகிறது.

போட்டோ - http://v.duta.us/pK9vGgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/paqXYQAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬