திண்டுக்கல் பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து வரும் 18ம் தேதி முதல் 130 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

  |   Chennainews

சென்னை: திண்டுக்கல்-பழனி வட்டம் பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். பழநி அருகே ஆண்டிபட்டி ஊராட்சிக்குட்பட்டது குதிரையாறு அணை உள்ளது. இந்த அணையின் மேலே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பளியர் இன மலைவாழ் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இம்மக்கள் காடுகளில் தேன் எடுத்தல், கடுக்காய்- நெல்லி சேகரித்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். பழனியை அடுத்த பாலசமுத்திரத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் பாலாறு-பொருந்தலாறு அணை அமைந்துள்ளது. அணையின் மொத்த உயரம் 65 அடி ஆகும்.

கடந்த சில மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என வேளாண் பெருங்குடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழனி வட்டார விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பொருந்தலாறு அணையின் பழைய ஆறு அணைக்கட்டுகளில் இருந்து நவம்பர் 18 முதல் 130 நாட்களுக்கு 144 புள்ளி 52 மில்லியன் கனஅடியும், குதிரையாறு அணையில் இருந்து நாகன்வலசு இடது பிரதான கால்வாயில் 56 புள்ளி 31 மில்லியன் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்....

போட்டோ - http://v.duta.us/tj01GAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/S0bokAAA

📲 Get Chennainews on Whatsapp 💬