புதிதாக உருவாக்கப்பட்ட 🏛5 மாவட்டங்களுக்கு காவல்துறை 👮எஸ்.பிக்கள் நியமனம்🎉

✍இளவேனில்🌄

🏛தமிழகத்தில் புதியதாக மாவட்டங்கள் உருவாக்கப்படும் என 💺முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்😯. அதன்படி புதிதாக உருவாக்கப்பட்ட 🏛5 மாவட்டங்களுக்கு காவல்துறை 👮எஸ்.பிக்களை நியமனம் செய்து உள்துறை முதன்மைச் செயலாளர் 🤵நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார்⚖. அதன்படி, "🏛சென்னை பொருளாதார குற்றப்பிரிவு 👮எஸ்.பி விஜயகுமார், பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்ட 🏛திருப்பத்தூர் மாவட்ட 👮எஸ்.பி.யாக நியமனம்🎉 செய்யப்பட்டுள்ளார். 🏛திருச்சியில், காவல்துறை துணை ஆணையராக இருந்த 👮மயில்வாகனன், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்🙂. மேலும், 👮ஜெயச்சந்திரன் 🏛கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.யாகவும், 🏛செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.யாக 👮கண்ணன், 🏛தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக 👮சுகுனாசிங் உள்ளிட்ட 👥14 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது👍" என்று அறிவிக்கப்பட்டுள்ளது📣.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬