பாத்திமா தற்கொலை விவகாரத்தில் குற்றவாளி கைது செய்யப்படுவார் என முதல்வர் உறுதியளித்ததாக தந்தை பேட்டி

  |   Chennainews

சென்னை: தனது மகள் பாத்திமா கொலை செய்யப்பட்டதாக தந்தை அப்துல் லத்தீப் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். ஐஐடி மாணவி பாத்திமாவின் மரணம் குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று, மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை பெற்று தருவோம் என டிஜிபி உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து மாணவி கொலை வழக்கில் விசாரணையானது தீவிரமாக நடைபெற்று வருவதாக டிஜிபி தெரிவித்ததாகவும், பேராசிரியர் சுதர்சனை கைது செய்ய டிஜிபியிடம் தாம் கோரிக்கை விடுத்ததாகவும் தந்தை அப்துல் லத்தீப் தெரிவித்தார். என்னுடைய மகள் எந்த சம்பவம் நடந்தாலும், அதை கடிதமாக எழுதி வைப்பார்.

இந்த சம்பவம் குறித்து அனைத்து விவரங்களையும் தெளிவாக அவர் எழுதி வைத்துள்ளார். இந்த சம்பவத்தை பார்க்கும் போது தனது மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என தெளிவாக தெரிகிறது. மேலும் திறமையும், அறிவும் பெற்ற என் மகள் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. படிப்பில் கெட்டிக்காரராக திகழ்ந்த தனது மகள் மிகவும் மன தைரியம் கொண்டவர். பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனை பார்த்து என் மகள் அச்சமடைந்திருக்கிறார் என்று அவர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தனது மகள் பாத்திமா கொலை செய்யப்பட்டதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்....

போட்டோ - http://v.duta.us/_VQh_wAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/NJAaoQAA

📲 Get Chennainews on Whatsapp 💬