🏆பாரா ஒலிம்பிக் போட்டிக்கு ✅தகுதி பெற்றார் 👤மாரியப்பன் தங்கவேலு

ஓமலூரைச் சேர்ந்த ♿மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் மாரியப்பன் தங்கவேலு, கடந்த 2016-ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதல் பிரிவில் 🥇தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். மேலும் இவருக்கு பத்மஸ்ரீ 🏅விருதும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் துபாயில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள 🏆சாம்பியன்ஷிப் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில், 1.80 மீட்டர் உயரம் தாண்டி 🥉வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடக்க உள்ள பாரா ஒலிம்பிக் போட்டிக்கு ✅தகுதி பெற்றுள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/LJEoFQAA