🏛மாநில 🗳தேர்தல் ஆணைய செயலாளர் பணியிட மாற்றம்😳

✍இளவேனில்🌄

🏛தமிழ்நாடு மாநில 🗳தேர்தல் ஆணைய செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது⚖. அதன்படி, 🤵பழனிசாமி நகர பஞ்சாயத்துகள் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. விழுப்புரம் ஆட்சியர் 🤵எல். சுப்பிரமணியன் இடமாற்றப்பட்டு, தமிழ்நாடு மாநில 🗳தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்🎉 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 🏛பெருநகர சென்னை மாநகராட்சி பணிகள் பிரிவு துணை ஆணையர் 🤵கோவிந்த ராவ் 🏛தஞ்சை 💺ஆட்சியராகவும், தஞ்சை ஆட்சியர் 🤵அண்ணாதுரை விழுப்புரம் ஆட்சியராகவும், 🏛விருதுநகர் ஆட்சியர் 💺சிவஞானம் சுகாதார மற்றும் 👥குடும்ப நலத்துறை கூடுதல் செயலராகவும்😯, சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் 🤵கண்ணன் விருதுநகர் ஆட்சியராகவும் இடமாற்றப்பட்டுள்ளதாக😳 தெரிவிக்கப்பட்டுள்ளது. 🔈

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬