மின்பாதையில் பழுது ஏற்பட்டால் இணைப்பை துண்டிக்காமல் சீரமைப்பது குறித்து பயிற்சி

  |   Chennainews
  • பழுதை கண்டறிய 'ட்ரோன்'

  • அமைச்சர் தங்கமணி தகவல்

புழல்: புழல் அடுத்த அலமாதி அருகே வாணியன்சத்திரத்தில் உள்ள துணை மின்நிலையத்தில் மின் ஊழியர்கள் மின்பாதையில் பழுது ஏற்படும் காலங்களில் மேற்கொள்ளும் பராமரிப்பு பணிகளை தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா. பாண்டியராஜன் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டனர். பின்னர் அமைச்சர் தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது: மின் பழுது ஏற்பட்டால் மின் இணைப்பை துண்டிக்காமல் நேரடியாக பணி செய்யும் நடவடிக்கையாக இந்த டெமோ மேற்கொள்ளப்பட்டது. 400 கிலோவாட் மின்சாரம் பாயும் மின்பாதையில் இணைப்பை துண்டிக்காமல் நேரடியாக பழுது நீக்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பணியால் 4 மணி நேர மின் தடை ஏற்பட வேண்டிய சூழலில் மின் தடை அரை மணி நேரமாக குறைக்கப்படும். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதன்முறையாக இந்த பணிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து 160 பேர் பயிற்சி பெற்று இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மின் தடங்களில் பழுது கண்டறிய ட்ரோன் மூலம் 3 கி.மீ. பறந்து பழுது பார்க்கப்படும். 2024ம் ஆண்டிற்குள் புதிய மின்திட்டங்கள் மூலம் தமிழகத்தில் கூடுதலாக 6000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்....

போட்டோ - http://v.duta.us/K48HEgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/DDEE3QAA

📲 Get Chennainews on Whatsapp 💬