🎥'அவஞ்சர்ஸ்' படத்திற்கு தமிழ் வசனம் ✍எழுதுகிறார் 🎬ஏ.ஆர்.முருகதாஸ்

  |   Kollywood

✍இளவேனில்🌄

கடந்த 📆ஆண்டு வெளியான 🎥‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி’ திரைப்படம் 🇮🇳இந்தியாவில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி 💸வசூலில் பெரும் சாதனை படைத்தது. இந்நிலையில் தென்னிந்திய மொழிகளில்🗣 வெளியாகும் சூப்பர் ⭐ஹீரோக்களின் படமான 🎥அவெஞ்சர்ஸ் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு👏 இருப்பதால், 🎥‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ திரைப்படத்திற்கு தமிழில் 🎬இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வசனம்🗣 எழுதுகிறார். இது குறித்து அவர்🎙, "மார்வல் திரைப்படங்களின் கதை, அதிசயமூட்டும் காட்சிகள், பிரம்மாண்டம் என அனைத்தும் எனக்கு பிடிக்கும். ✍கதாசிரியர், 🎬இயக்குநர் என்பதை தாண்டி 🎥அவெஞ்சர்ஸ்க்கு நானும் ஒரு ரசிகன்😍" என்றும், "அவெஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோக்களுக்கு வசனம் எழுதுவதில் மகிழ்ச்சி. ஒரிஜினல் படத்தின் தாக்கம் சற்றும் குறையாத விதமாக👍 வட்டார வழக்குகளில் எளிய நடையில் வசனம் ✍எழுதியிருக்கிறேன்" என்றும் தெரிவித்துள்ளார்🔈.

💻சமூக வலைத்தளங்களில் உலா வரும் பல்வேறு 📹காணொளி காட்சிகளை ஒன்றாக தொகுப்பதில் ஆர்வம்🤗 கொண்டவரா நீங்கள்⁉அவ்வாறெனில் 💻தூத்தாவில் இணைய 😍விருப்பம் இருந்தால் ✍விண்ணப்பிக்கலாம்👉info@duta.in

📲 Get கோலிவுட் on Whatsapp 💬