⛰சபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 🏛ஆந்திர 👩இளம்பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்😯

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

⛰சபரிமலை சுவாமி ஐயப்பன் 🏛கோவிலில் அனைத்து வயது 👩பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று 🏛உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு⚖ வழங்கியது. ஆனால் காலம் காலமாக சபரிமலையில் கடைபிடிக்கப்படும் ஐதீகத்தை மீறி 👩இளம்பெண்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க மாட்டோம்🚫 என்று ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளும் கேரளாவில் 😳போராட்டம் நடத்தி வருகிறார்கள். தற்போது 📆மாசி மாத பூஜைக்காக ⛰சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது😯. இந்த நிலையில் நேற்று பகல் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 4 இளம்பெண்கள் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்யச் சென்றனர்😐. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 👮போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை🗣 நடத்தினார்கள். சபரிமலையில் இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு செல்ல எதிர்ப்பு😡 தெரிவித்து பக்தர்கள் போராட்டம்💪 நடத்துவதால் அங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக🙄 அவர்களிடம் எடுத்துக் கூறினார்கள். 👮போலீசாரின் அறிவுரையை ஏற்று அந்த 👩4 இளம்பெண்களும் திரும்பிச் சென்றனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬