புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்தவரின் உடலை சுமந்த 🤵ராஜ்நாத் சிங்

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🏔காஷ்மீர் மாநிலத்தின் 🏛புல்வாமா மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் மீது நேற்று நடந்த தற்கொலைப்படை தாக்குதல்😳 குறித்து டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் உள்துறை மந்திரி 🤵ராஜ்நாத் சிங், பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், நிதித்துறை மந்திரி அருண் ஜெட்லி ஆகியோர் இன்று முக்கிய ஆலோசனை🤔 நடத்தினர். பின்னர், மத்திய உள்துறை மந்திரி 🤵ராஜ்நாத் சிங் 🛩தனிவிமானம் மூலம் இன்று பிற்பகல் ஜம்மு நகரை வந்தடைந்தார். நேற்றைய தாக்குதலில் உயிரிழந்த 👥40 வீரர்களின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் பட்காம் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் இறுதி மரியாதை🙏 செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தன. அப்போது அங்கு கூடியிருந்த வீரர்கள் ‘வீர் ஜவான் - அமர் ரஹே’ என்று உணர்ச்சி பொங்க முழக்கமிட்டனர்📣. பின்னர் ராஜ்நாத் சிங், மத்திய பாதுகாப்பு படையின் ஜம்மு-காஷ்மீர் மாநில 👮டி.ஜி.பி. தில்பாக் சிங் ஆகியோர் மரணம் அடைந்த 👮வீரரின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியை தோளில் சுமந்தபடி😐 நடந்துசென்று 🚐வாகனத்தில் ஏற்றி வைத்தனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬