வீரமரணமடைந்த😳 2 தமிழக வீரர்களின் 👥குடும்பங்களுக்கு தலா 💸ரூ.20 லட்சம் நிதி

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🏔ஸ்ரீநகர்–ஜம்மு 🛣நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பாதுகாப்பு படை 👮வீரர்களின் 🚗வாகனங்களை குறித்து வைத்து பயங்கரவாதிகள் 🔫துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். கிட்டத்தட்ட 70க்கும் மேற்பட்ட வாகனங்களில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதில், ஒரேயொரு வாகனத்தை மட்டும் குறித்து வைத்து 😳பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 👥40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்😟. மேலும், பலர் பலத்த 🤕காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் வீரமரணம் அடைந்த 👮சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு 🏛தமிழக 💺முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அதோடு, வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களான சிவலப்பேரியின் 👨சுப்பிரமணியன் மற்றும் அரியலூர் கார்குடி 👨சிவசந்திரன் ஆகியோரது குடும்பங்களுக்கு தலா 💸ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬