[ariyalur] - விளாங்குடியில் தொழில்முறை வழிகாட்டி கண்காட்சி, கருத்தரங்கு

  |   Ariyalurnews

அரியலூர், பிப். 15: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், அரியலூர் மற்றும் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி சார்பில் 2018-19ம் ஆண்டிற்கான தொழில்முறை வழிகாட்டி கண்காட்சி மற்றும் கருத்தரங்கு விளாங்குடியில் நடந்தது. கண்காட்சி, கருத்தரங்ைக துவக்கி வைத்து அரியலூர் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி புல முதல்வர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். பின்னர் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். விளாங்குடி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி பேராசிரியர் சுரேஷ்குமார் பேசினார்.

போட்டி தேர்வுகள் குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொ) மணிவேல் எடுத்துரைத்தார். ராணுவத்தில் வேலைவாய்ப்பு குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரியலூர் முன்னாள் படைவீரர் நல அலுவலக உதவி இயக்குனர் குணசேகரன் எடுத்துரைத்தார். மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு சலுகை மற்றும் தனியார்துறை வேலைவாய்ப்பு குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் அண்ணாதுரை சிறப்புரையாற்றினார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக இளநிலை அலுவலர் வினோத்குமார் நன்றி கூறினார். 350க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/jo7fPAAA

📲 Get Ariyalurnews on Whatsapp 💬