[dharmapuri] - கோடை காலத்தையொட்டி வனப்பகுதியில் தீ தடுப்பு நடவடிக்கைகள் மும்முரம்

  |   Dharmapurinews

தர்மபுரி, பிப்.15: தர்மபுரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், வனப்பகுதியில் தீ பரவாமல் தடுக்க தீ தடுப்பு நடவடிக்கைகளை வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் 1,700 சதுர கிலோ மீட்டர் வனக்காப்புக் காடுகளை கொண்டது. இம்மாவட்ட காடுகள், கர்நாடகம், தமிழகம் ஆகியவற்றின் எல்லைகள் சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த காடுகள் காவிரி, தென்பெண்ணை ஆறு, சனத்குமார நதி, வாணியாறு ஆகிய ஆறுகளுக்கு நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ளன. தென்மேற்கு, வடகிழக்கு மழைக்காலங்களில் மழையை பெறும் இம்மாவட்டம், சராசரியாக 851.1 மில்லி மீட்டர் மழையை பெறுகிறது. இந்த ஆண்டு சராசரி மழையளவில் 45 சதவீதம் மட்டுமே பெய்துள்ளது. தர்மபுரி மாவட்ட வனங்கள் பெரும்பான்மையும், இலையுதிர் காடுகளாகவே உள்ளன. ஓரிரு இடங்களில் வறண்ட பசுமை மாறாக் காடுகளும் காணப்படுகின்றன. தர்மபுரி காடுகளில் தேக்கு, சந்தனம், வேம்பு, புளிய மரம், துரிஞ்சை, ஆல், வேலம், நீலகிரி, எட்டி, நாகமரம் உள்ளிட்ட பங்வேறு வகை மரங்கள் உள்ளன. மேலும், யானை, சிறுத்தை, காட்டு பன்றி, மான், கரடி, காட்டெருமை, நரி, குரங்குகள் அதிகளவில் உள்ளன....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/YwRqfgAA

📲 Get Dharmapurinews on Whatsapp 💬