[erode] - வேளாண் விளைபொருட்களை இருப்பு வைக்க மாவட்டத்தில் 18 இடங்களில் குடோன்

  |   Erodenews

ஈரோடு, பிப். 15: ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ளும் வகையில் 18 இடங்களில் குடோன் வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு 45 ஆயிரம் மெட்ரிக் டன் வரை இருப்பு வைத்துக் கொள்ளலாம்.ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் மஞ்சள், நிலக்கடலை, எள், தேங்காய் பருப்பு, தேங்காய், துவரை, பருத்தி, நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட 15 வகையான பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் வகையில் 18 இடங்களில் குடோன் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து குடோன்களில் 45 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் வரை இருப்பு வைத்துக் கொள்ளலாம். இதில், மஞ்சள் டன்னுக்கு ஒரு மாதத்திற்கு 60 ரூபாயும், மற்ற விளை பொருட்களுக்கு ஒரு மாதத்திற்கு 15 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

15 நாட்கள் வரை விவசாயிகள் இந்த குடோன்களை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். மாவட்டத்தில் உள்ள 18 குடோன்களில் 16 குடோன் சொந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சித்தோடு மற்றும் நம்பியூர் ஆகிய பகுதிகளில் வாடகை இடத்தில் குடோன் உள்ளது. இந்த பகுதிகளில் சொந்தமாக குடோன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சித்தோடு பகுதியை பொருத்தவரை நாட்டு சர்க்கரை அதிக அளவில் விவசாயிகள் கொண்டு வருகின்றனர். இவற்றை இருப்பு வைத்துக் கொள்ளும் வகையில் சொந்தமாக ஒரு ஹெக்டேர் பரப்பளவில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குடோன் கட்டப்பட உள்ளது....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/RrDtGQAA

📲 Get Erodenews on Whatsapp 💬