[kanchipuran] - அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தில் ஊழல் புகார் எதிரொலி நிர்வாகக் குழுவை ஏன் கலைக்கக் கூடாது?: துணை இயக்குனர் நோட்டீஸ்

  |   Kanchipurannews

காஞ்சிபுரம், பிப்.15: காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தில் நடந்த ஊழல் புகார் எதிரொலியாக நிர்வாகக்குழுவை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என கேட்டு கைத்தறித் துறை துணை இயக்குநர் நோட்டிஸ் அனுப்பியுள்ளார். இதனால், நெசவாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கைத்தறித் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தில் 2,800க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த 2017-18 ஆண்டுகளில் சங்க வரவு செலவுகளில் குளறுபடி நடந்ததாக கூறப்படுகிறது.இதில், ₹2.1 கோடி சங்க விளம்பர செலவு, 97 முறை வெளியூர் பயண செலவு, விருந்தினர் உபசரிப்பு செலவு என மிகுதியாக தணிக்கை அறிக்கையில் கணக்கு காட்டப்பட்டுள்ளது. மொத்தம் விளம்பர செலவினத்தில் மட்டும் ₹1.5 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக சங்க உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.இதற்கிடையில், சங்கத்தில் ₹60 கோடி லாபம் இட்டி இருந்தாலும் பொங்கல் போனஸ் கடந்த ஆண்டு தரப்பட்ட 45 பைசாவை, 24 பைசாவாக குறைக்கப்பட்டது. இதனால், நெசவாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.இதனால், ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் மகாசபை எனும் பேரவைக் கூட்டத்தில் சங்கத்தில் நடந்த ஊழல்கள், பொங்கல் போனஸ் குறைக்கப்பட்டது ஆகியவை குறித்து நெசவாளர்கள் சரமாரியாக குற்றஞ்சாட்டினர். இதையொட்டி மகாசபை 3 முறை தள்ளிவைக்கப்பட்டது....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/UxDaYAAA

📲 Get Kanchipurannews on Whatsapp 💬