[kanchipuran] - காஞ்சிபுரம் பவளவிழா மாளிகையில் அண்ணா, கலைஞர் சிலை திறப்பு விழா: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

  |   Kanchipurannews

காஞ்சிபுரம், பிப்.15: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திமுக அலுவலகமான கலைஞர் பவளவிழா மாளிகையில் முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி மற்றும் அண்ணா திருவுருவ சிலைகள் திறப்பு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிலைகளை திறந்து வைத்தார்.காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருக்கச்சி நம்பி தெருவில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் பவளவிழா மாளிகையில், மறைந்த அக்கட்சியின் முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியின் முழு திருஉருவச் சிலை மற்றும் அறிஞர் அண்ணா சிலை திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் வரவேற்றார். மாவட்ட அவைத்தலைவர் சுகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், மாணவரணி செயலாளர் வக்கீல் எழிலரசன் எம்எல்ஏ, மாவட்ட துணைச் செயலாளர்கள் வெளிக்காடு ஏழுமலை, தசரதன், வசந்தமாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தலைவர் கலைஞர் கருணாநிதி, அண்ணா சிலைகளை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/HFFMpwAA

📲 Get Kanchipurannews on Whatsapp 💬