[kanchipuran] - காதலர் தின கொண்டாட்டம் : மாமல்லபுரத்தில் உற்சாகம்

  |   Kanchipurannews

மாமல்லபுரம், பிப்.15: கிறிஸ்தவ பாதிரியார் வாலன்டைன் நினைவாக பிப்ரவரி மாதம் 14ம் தேதி காதலர்கள் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.சென்னையை ஒட்டிய கடற்கரை நகரமான மாமல்லபுரம் சாதாரண நாட்களில் காதலர்களின் சொர்க்கபுரியாக திகழ்வது வழக்கம். இந்நிலையில், காதலர் தினத்தையொட்டி நேற்று காதல் ஜோடிகளின் முற்றுகையில் சிக்கித் தவித்தது.இந்நிலையில் காதலர் தினமான நேற்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து காதல் ஜோடிகள் பைக், கார், பஸ்களில் வந்து குவிந்தனர். இதனால் மாமல்லபுரத்தில் எங்கு திரும்பினாலும் காதல் ஜோடிகளின் உற்சாக துள்ளல்களையே பார்க்க முடிந்தது.மாமல்லபுரத்தின் கலை நயம் மிக்க சிற்பங்களை காதலர்கள் கட்டிப்பிடித்தபடியும், கைகோர்த்தபடியும் ரசித்தனர். மேலும் சில காதலர்கள் வெட்டவெளியில் முத்தங்களை பரிமாறிக் கொண்டனர். மாமல்லபுரத்தில் பிரசித்தி பெற்ற கற்சிற்பங்களையும், கழுத்தில் அணியும் டாலர்களையும் காதல் சின்னமாக ஒருவருக்கொருவர் வாங்கி பரிமாறிக் கொண்டனர்.மேலும் கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதனச் சின்னங்களின் முன் நின்றபடி செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.நேற்று மாமல்லபுரம் முழுவதும் சுற்றுலாப் பயணிகளுக்கு பதிலாக காதல் ஜோடிகளே அதிகம் தென்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/_ISluQAA

📲 Get Kanchipurannews on Whatsapp 💬