[kanchipuran] - திமுக பிரமுகர் கொலையில் திருவள்ளூர் கோர்ட்டில் மேலும் 5 பேர் சரண்

  |   Kanchipurannews

சென்னை, பிப். 15: பெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் பள்ளத் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (48). திமுக செயலாளர். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இவரது மனைவி மாரி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன் ரமேஷ், பெரும்புதூர் - குன்றத்தூர் சாலை கட்சிப்பட்டு பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் வரவு செலவு கணக்குகளை பார்த்து கொண்டிருந்தார். அப்போது ஆட்டோ, பைக்குகளில் வந்த 10 பேர் கும்பல், அலுவலகத்தில் இருந்த ரமேஷை சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு தப்பியது. புகாரின்படி, பெரும்புதூர் இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். அதில், பெரும்புதூர் அடுத்த கிளாய் பகுதியை சேர்ந்த குல்லா (எ) விஸ்வநாதனும், அவரது கூட்டாளிகளும் ரமேஷை கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார், குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இதற்கிடையில், குல்லா (எ) விஸ்வநாதன் (24), சுரேந்தர் (25), சத்யா (27), செந்தில்குமார் (28) ஆகியோர், நேற்று கடந்த 2 நாட்களுக்கு முன், திருச்சி கோர்ட்டில் சரணடைந்தனர்....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/vR67TAAA

📲 Get Kanchipurannews on Whatsapp 💬