[kanchipuran] - வேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலையில் பரபரப்பு நள்ளிரவில் டிரான்ஸ்பார்மர் மீது வாகனம் மோதி விபத்து: சாலையில் ஆயில் கொட்டியதால் வழுக்கி விழுந்த வாகன ஓட்டிகள்

  |   Kanchipurannews

வேளச்சேரி, பிப்.15 : வேளச்சேரி பிரதான சாலையில் இருந்த மின் டிரான்ஸ்பார்மர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் வாகனத்தில் இருந்து ஆயில் கசிவு கொட்டியதால் வாகன ஓட்டிகள் பலர் வழுக்கி விழுந்ததில் காயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.வேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலையில், பள்ளிக்கரணை அருகே பாரதிதாசன் நகர் இணையும் பகுதியில், சாலையின் நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக ஒரு மின் டிரான்ஸ்பார்மர் உள்ளது.

இந்த டிரான்ஸ்பார்மரை அகற்றி சாலையோரமாக மாற்றியமைக்க வேண்டும் என பொதுமக்கள், மின்வாரிய அதிகாரிகளுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, சாலையின் நடுவே உள்ள மின் டிரான்ஸ்பார்மர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில், அந்த வாகனத்தில் இருந்து ஆயில் கசிவு ஏற்பட்டு சாலை முழுவதும் கொட்டி பரவியது.

இதனால் அவ்வழியே சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் வழுக்கி விழுந்து காயம் அடைந்தனர். கார்களும், கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடின. இதனால் அங்கு கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.தகவலறிந்து பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பொதுமக்களின் உதவியுடன், சாலையில் பரவி இருந்த ஆயில் மீது மணலை கொட்டி சரி செய்தனர். இதனை தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள், அங்கு சென்று, மின் இணைப்பைத் துண்டித்து டிரான்ஸ்பார்மரை பழுது பார்த்தனர். பின்னர் சுமார் ஒருமணி நேரத்துக்கு பின் போக்குவரத்து சீரானது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/i4OVLwAA

📲 Get Kanchipurannews on Whatsapp 💬