[karur] - கரூர் நகராட்சியையொட்டிய காதப்பாறை ஊராட்சி மக்கள் அடிப்படை வசதியின்றி தவிப்பு 25 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை குப்பைகளை எரிப்பதால் சுகாதார சீர்கேடு

  |   Karurnews

கரூர், பிப். 15 காதப்பாறை ஊராட்சியில் மக்கள் அடிப்படை வசதியின்றி தவிக்கின்றனர். நகரையொட்டிய பகுதியில் குடிநீருக்காக பரிதவிக்கின்றனர்.கரூர் நகராட்சியை அடுத்துள்ள ஊராட்சி பகுதி காதப்பாறை. இங்கு வெண்ணெய்மலை, காதப்பாறை பகுதி உள்ளிட்ட 9 சிற்றூராட்சி வார்டுகள் உள்ளன. இதன் அருகே உள்ள இனாம் கரூர் நகராட்சி தற்போது கரூர் நகராட்சி நிர்வாகத்தோடு இணைக்கப்பட்டு பெருநகராட்சியாக இருக்கிறது. காதப்பாறை ஊராட்சியாக இருந்தாலும் நகரை ஒட்டியிருக்கிறது.

நகர பகுதியில் இருப்பது போன்ற குடியிருப்புகள் ஏராளமாக உள்ளன. கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் பெருகி தொழில் வளர்ச்சி மற்றும் மக்கள் தொகையில் ஒரு சிறிய நகரத்தை போல இருக்கிறது. ஊராட்சிக்கு இதுவரை ஆண் தலைவர்கள் இருந்த நிலையில் இம்முறை தலைவர் பதவி பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டும் தேர்தல் நடத்தப்படவில்லை. மக்கள் தொகை. ஆண்கள் 3816. பெண்கள் 4124. மொத்தம் 7940. வருங்காலத்தில் கரூர் மாநகராட்சியாகும்போது காதப்பாறை ஊராட்சி கரூருடன் இணைக்கப்படும் நிலை உள்ளது. தற்போது நடைபெறப்போகும் உள்ளாட்சி தேர்தல் தான் கடைசி தேர்தலாக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தல் நடத்தப்பட்வில்லை. மாநில அரசின் ஆட்சிக்காலம் 5 ஆண்டுகள் அதில் இரண்டு ஆண்டுக்கும் மேலாக தேர்தல் நடத்தப்படாமல் தனி அதிகாரிகளின் பதவி தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகள் பூதாகரமாகி கொண்டிருக்கிறது....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/IVj8cwAA

📲 Get Karurnews on Whatsapp 💬