[nagapattinam] - ரூ.700க்கு பதில் 400க்கு விற்பதால் மக்கள் அச்சம் மயிலாடுதுறையில் கலப்பட பனைவெல்லம் விற்பனையா?

  |   Nagapattinamnews

மயிலாடுதுறை பிப்.15: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கலப்பட பனைவெல்லம் விற்பனை செய்யப்படுகிறதா என்று பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.நவீன காலத்தில் வெள்ளைச் சர்க்கரை எனப்படும் சீனியால் மனிதனது மூட்டுக்களில் உள்ள நீர் குறைந்து குறிப்பிட்ட வயதில் மூட்டுவலி ஏற்படுவதாக மருத்துவர்கள் கண்டுபிடித்து அதை பரப்பி வருகின்றனர், கரும்பிலிருந்து சீனியை தயாரிக்கும்போதும் அவற்றை வெண்மை நிறமாக்கும்போதும், சீனியில் உள்ள அழுக்கை நீக்குவதற்கும் குறிப்பிட்ட ரசாயனப் பொருட்களை கட்டாயம் கலந்தே ஆகவேண்டிய சூழல் உள்ளது. இந்த ரசாயனப் பொருட்கள் சீனியில் கலந்து அதுவே மனிதனது அன்றாட உணவுப்பொருட்களில் எந்த வடிவத்திலாவது கலந்து விடுகிறது. சீனி இல்லாத வாழ்க்கையே இல்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 80 வயதிற்குமேல் மூட்டுவலி வந்த நிலை மாறி 40 வயதிற்குள் மூட்டு வலி ஏற்பட்டு விடுகிறது. டாக்டரிடம் சென்றால் மூட்டில் உள்ள பசை காலியாகி விட்டது. அவற்றை சரிசெய்வதற்கு தேயைான பசைக்கு மீண்டும் ரசாயனம் கலந்து மாத்திரைகளையே விழுங்க வேண்டியுள்ளது. இதனால் குறிப்பிட்ட காலத்தில் கால், கை நடமாட்டம் குறைந்து படுத்தபடுக்கையாகி விடுகின்றனர். இதிலிருந்து தப்பிப்பதற்கு சீனியை தவிர்க்க வேண்டும், அதற்கு பதிலாக நாட்டுச் சர்க்கரையை உபயோகப்படுத்த வேண்டும். அதிலும் வண்ணம் மங்கலாக உள்ள சர்க்கரை மட்டுமே எந்த பக்க விளைவுகளை ஏற்படுத்தாது என்று நாட்டு சர்க்கரையை பயன்படுத்த வலியுறுத்துகின்றனர். இதனை உபயோகப்படுத்தப்படும் போது மூட்டில் உள்ள பசைக்கு எந்தவித ஆபத்தும் இருக்காது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அடிக்கடி சித்த மருத்துவர்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதால் மக்கள் சீனியை படிப்படியாகத் தவிர்த்து வருகின்றனர்....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/9xA7DgAA

📲 Get Nagapattinamnews on Whatsapp 💬