[nilgiris] - கட்டிடத்திற்கு சீல் வைக்க சென்ற அதிகாரிகள் முற்றுகை

  |   Nilgirisnews

ஊட்டியில் பரபரப்பு

ஊட்டி, பிப். 15: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட மெயின் பஜார் பகுதியில் விதிமுறை மீறிய கட்டிடத்திற்கு சீல் வைக்க சென்ற அதிகாரிகளை கட்டிட உரிமையாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதிமுறை மீறிய கட்டிடங்கள் ஏராளமாக உள்ளன. இவைகளை கண்டறிந்து தற்போது சீல் வைக்கும் பணிகளை நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த வாரம் முதல் இதுவரை 21 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இவைகளில் வணிக ரீதியான கட்டிடங்கள் மட்டுமின்றி, குடியிருப்புகளும் அடங்கும். இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன் ஊட்டி மெயின் பஜார் பகுதியில் உள்ள ஒரு விதிமுறை மீறிய கட்டிடத்திற்கு சீல் வைக்கும் பணிகளை நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். அந்த கட்டிடம், குடியிருப்பிற்கான அனுமதி பெற்று வணிக ரீதியாக பயன்படுத்தப்பட்டதால் சீல் வைக்கப்பட்டது. மேலும், அதே கட்டிடத்தில் விதிமுறைகளை மீறி இரண்டாவது மற்றும் மூன்றவாது மாடியும் கட்டியுள்ளனர். மூன்றாவது மாடியை இடிக்க நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/Eqz0xgAA

📲 Get Nilgirisnews on Whatsapp 💬