[nilgiris] - பொக்காபுரம், சோலூரில் மக்கள் தொடர்பு முகாம்

  |   Nilgirisnews

ஊட்டி, பிப். 15: ஊட்டி அருகேயுள்ள பொக்காபுரம், சோலூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் 278 பயனாளிகளுக்கு ரூ.20.14 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.அப்போது, மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசியதாவது: சோலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2017-18 நிதியாண்டில் ரூ.2.74 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டது. இதில், அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ.6 கோடி மதிப்பில் 318 வீடுகள் கட்டும் பணி நடக்கிறது. வீடு கட்டுவதற்கு ஆணைகள் வழங்கப்பட்டு வீடு கட்டாமல் உள்ள பயனாளிகள் வீடுகள் கட்ட குழுக்கள் அமைத்து அதன் மூலம் நிதி திரட்டி பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

தலா ஒரு வீட்டிற்கு ரூ.50 ஆயிரம் வீதம் 64 வீடுகள் பழுது பார்க்கும் பணி தற்போது நடக்கிறது. அதேபோல், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பிடம் கட்ட பேரூராட்சிகளில் ரூ.8 ஆயிரமும், ஊராட்சிகளில் ரூ.12 ஆயிரமும் அரசு வழங்குகிறது. இதனை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும், கிஷான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் 5 ஏக்கருக்கு குறைவாக விவசாய நிலம் உள்ள விவசாயிகளுக்கு மாதத்திற்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் வழங்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் ரூ.25 ஆயிரம் பயனாளிகளுக்கு அரசு மானியம் வழங்குகிறது. எனவே இத்திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு இன்னசென்ட் திவ்யா பேசினார்....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/kr6UPQAA

📲 Get Nilgirisnews on Whatsapp 💬