[nilgiris] - ரத்த தான முகாம்

  |   Nilgirisnews

ஊட்டி, பிப். 15: கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், கூடலூர் அரசு மருத்துவமனை, நெலக்கோட்டை சமுதாய சுகாதார நிலையம் ஆகியவை சார்பில் கோழிப்பாலம் பகுதியில் ரத்த தான முகாம் நேற்று நடந்தது. இதில் என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் மகேஸ்வரன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் சுரேஷ் தலைமை வகித்தார்.

இதுகுறித்து ரத்தவங்கி மருத்துவ அலுவலர் மயில்சாமி கூறுகையில்: ‘18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை ரத்ததானம் செய்யலாம். மது அருந்தினால் 24 மணி நேரம் ரத்தம் வழங்க முடியாது,’ என்றார்.

இதில் வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இம்முகாமில் 22 பேர் ரத்த தானம் செய்தனர். பின் முகாமில் சேகரிக்கப்பட்ட ரத்தம் கூடலூர் ரத்த வங்கிக்கு எடுத்து செல்லப்பட்டது.

பிரிவு 17நிலம் தொடர்பான கூட்டம் புறக்கணிப்பு

கூடலூர், பிப்.15: கூடலூர் பந்தலூர் தாலுகா பகுதிகளில் விவசாயிகள் பொதுமக்கள் வசிக்கும் பிரிவு 17 நிலப்பிரச்னை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும், பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அனைத்து அரசியல் பொது நல அமைப்புகள் அடங்கிய விளக்ககூட்டம் கூடலூர் ஊரட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் இன்னொசன்ட் திவ்யா தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகள் பொது நல அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/hX4tTgAA

📲 Get Nilgirisnews on Whatsapp 💬