[perambalur] - 20 ஆண்டுகளாக கைவிடப்பட்டகொத்தமல்லி சாகுபடி செய்யும் விவசாயிகள் எண்ணிக்கை குறைவு இளம் தலைமுறைக்கு தெரியாமல் போய்விடும் நிலை

  |   Perambalurnews

பாடாலூர், பிப். 15: இருபது ஆண்டுகளாக கைவிடப்பட்ட கொத்தமல்லி சாகுபடி செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதால், இளம் தலைமுறைக்கு தெரியாமல் போய்விடும் நிலை உருவாகியுள்ளது.பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஆலத்தூர் தாலுகா பகுதியில் வானம் பார்த்த பூமியாக உள்ள மானாவாரி நிலங்களே அதிக அளவில் உள்ளது. குறிப்பாகஆலத்தூர் தாலுக்காவின் கிழக்குப்பகுதியில் உள்ள கொளக்காநத்தம், கொட்டரை, கூடலூர், இலுப்பைக்குடி, அயினாபுரம், அணைப்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் உள்ள அனைத்து நிலங்களும் மானாவாரி விவசாய நிலங்களே அதிகளவில் உள்ளன. ஆலத்தூர் தாலுகாவில் மேற்கு பகுதியில் உள்ள பாடாலூர் செட்டிகுளம், இரூர், நாட்டார்மங்கலம், நக்கசேலம், அடைக்கம்பட்டி, தேனூர், கண்ணப்பாடி, மாவலிங்கை உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட கிணற்று பாசன நிலங்கள் உள்ளன. மற்ற நிலங்கள் மானாவாரி விவசாய நிலங்களாகவே உள்ளன. கிணற்று பாசனம் இருந்தாலும் வானம் மழை பொழிந்தால் மட்டுமே அந்த கிணற்றில் நீர் ஊற்று பிடித்து விவசாயம் செய்ய முடியும் என்ற நிலைமையில் தான் விவசாயிகள் உள்ளனர்....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/os5I5gAA

📲 Get Perambalurnews on Whatsapp 💬