[pudukkottai] - அறந்தாங்கியில் நெல் அறுவடை தீவிரம் எள், உளுந்து சாகுபடிக்கு மானிய விலையில் விதைகள் விவசாயிகள் எதிர்பார்ப்பு

  |   Pudukkottainews

அறந்தாங்கி, பிப். 15: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வருவாய் கோட்டத்தில் 60 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் நடந்து வருகிறது. இதில் 25,000 ஏக்கர் காவிரி நீர் மூலமும், 35 ஆயிரம் ஏக்கர் மழைநீர் மூலமும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் போதிய மழை பெய்யாததால் விவசாயம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்தாண்டு காவிரியில் வந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனர். இந்தாண்டு 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கதிர்களாகி உள்ளன. ஆனால் மழையை மட்டுமே நம்பி சாகுபடி செய்யப்பட்டிருந்த பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகின. மேலும் பல்வேறு பகுதிகளில் குலைநோய் தாக்குதலாலும் விவசாயம் பாதிக்கப்பட்டது.இந்நிலையில் இப்பகுதியில் கதிர் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை விவசாயிகள் கதிர் அறுவடை முடிந்த பின் தொடர் சாகுபடியாக எள், உளுந்து சாகுபடி செய்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக நிலவிய வறட்சியின் காரணமாக விவசாயிகள் ஒருபோக சாகுபடியையே செய்ய முடியாத நிலையில் தொடர் சாகுபடி என்பது கானல் நீர் போல இருந்தது....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/JbHsBAAA

📲 Get Pudukkottainews on Whatsapp 💬