[pudukkottai] - கஜாபுயலில் சாய்ந்த மின்கம்பங்களால் பயிர்கள் பாதிப்பு புதிய கம்பங்கள் நட்டு உடனே மின் சப்ளை

  |   Pudukkottainews

ஆலங்குடி, பிப்.15: கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி அதிகாலை கஜாபுயல் வீசியது. இதனால் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர் உட்பட 7 மாவ ட்டங்கள் பெரும் பாதிப்படைந்தன. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற் பட்ட பாதிப்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மட்டுமல்லாமல், எதிர் காலத்தையே கேள்விக்குறியாக மாற்றியது. ஆலங்குடி தாலுகாவிற்குட்பட்ட வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், கீரமங் கலம், அணவயல், புள்ளான்விடுதி, நெடுவாசல் உட்பட பல்வேறு பகுதிகளிலும், கறம்பக்குடி தாலுகாவிற்குட்பட்ட மாங்கோட்டை, தெற்குத்தெரு, கருக்காகுறிச்சி, வாணக்கன்காடு, வாண்டான்விடுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராம ங்களும் கஜாபுயல் காற்றால் பெரும் இழப்பை சந்தித்துள்ளன. மேலும், இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக இருந்துவந்த நீண்டகால பயிரான தென்னை கிட்டத்தட்ட முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் கூலிதொழிலாளி முதல் முதலாளிகள் வரை அனைத்து தரப்பினரும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். இந்த பாதிப்பால் விவசாயிகளுக்கு பலகோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், பலகோடி ரூபாய் வரவு செலவுகள் முற்றிலும் முடங்கி விட்டன. அதேபோல், ஆலங்குடி மற்றும் கறம்பக்குடி தாலுகாவிற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பயிரிடப்பட்டிருந்த வாழை முற்றிலும் சேதமடைந்தது....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/vLi9vgAA

📲 Get Pudukkottainews on Whatsapp 💬