[tamil-nadu] - பெரம்பலூர் அருகே பணம் கடத்தி வருவதாக வந்த காரை சினிமா பாணியில் பிடித்த போலீசார்

பெரம்பலூர்: ராமநாபுரத்திலுள்ள காரில் பணம் கடத்தி வருவதாகக் கிடைத்தத் தகவலின் பேரில் பெரம்பலூர் அருகே சினிமா பாணியில் டோல்பூத்தில் சுற்றி வளைக்கப்பட்ட கருப்புநிறக் காரால் பரபரப்பு ஏற்பட்டது. பொய்யான தகவல் என்பதால் போலீசார் ஏமாந்தனர். ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு செல்லும் கருப்புநிறக் காரில் பலகோடி மதிப்பிலான பணம் கடத்தப்படுவதாகவும், அந்தக் கார் தற்போது பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் நுழைந்துவிட்டது, அதனை மடக்கிப்பிடியுங்கள் என அந்த மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டி பகுதி போலீசார் மூலம் பெரம்பலூர் மாவட்ட போலீசாருக்கு நேற்று ரகசியத் தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்ட எஸ்பி திஷாமித்தல் உத்தரவின்பேரில், பெரம்பலூர் டிஎஸ்பி ரவீந்திரன் 4 ரோடு பகுதிக்கு விரைந்தார். தேசிய நெடுஞ்சாலை ரோந்துப்படை போலீசாரும் உஷார் படுத்தப்பட்டனர். ஆனால் அதற்குள் அவர்கள் சொன்ன அடையாளங்களை கொண்ட கார் 4 ரோடு பகுதியைக் கடந்துவிட்டதாக பெரம்பலூர் டிஎஸ்பிக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து டிஎஸ்பி ரவீந்திரன், மங்களமேடு டிஎஸ்பி தேவராஜிக்குத் தகவல் கொடுத்தார். பிறகு ரவீந்திரன் ஸ்பெஷல் கிரைம்டீம் போலீசாருடன் மங்களமேடு பகுதிக்கு விரைந்துள்ளார்....

போட்டோ - http://v.duta.us/KsmHmAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/4RrvrQAA