[tamil-nadu] - மானாமதுரை அருகே நவீன அரிசி ஆலை கழிவால் சுற்றுச்சூழல் கடும் பாதிப்பு : கருக்காய் தூசுகளால் பொதுமக்கள் அவதி

மானாமதுரை: மானாமதுரை சிப்காட்டில் தமிழக அரசின் நவீன அரிசி ஆலையில் இருந்து வெளியே கொட்டப்படும் கழிவுகள் காற்றில் பறந்து வீடுகளில் உணவுகளிலும் கண்களிலும் விழுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. வயல்கள், புறம்போக்கு நிலங்களில் கொட்டப்படும் கழிவுகளால் சுற்றுவட்டார கிராமங்களில் தூசுகள் நீர் ஆதாரங்களை மாசுபடுத்துவதாக புகார் எழுந்துள்ளது. மானாமதுரை சிப்காட்டில் தமிழக அரசின் நவீன அரிசி ஆலை உள்ளது. இந்த ஆலையில் இருந்து தினமும் 60 டன் நெல் அரைக்கப்பட்டு அரிசியாக மாற்றப்படுகிறது. பின் அவை பொது விநியோக திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் பெறப்படும் நெல் சுடுநீரில் வேகவைத்து உலர்த்தி அரிசியாக மாற்றப்படுகிறது. இவ்வாறு நெல்லை அரிசியாக்குவதற்கு முன் நெல்லை வேகவைக்க சுடுநீர் தேவை. சுடுநீர் பெற நெல்லில் ஏற்கனவே பிரித்தெடுக்கப்பட்ட உமி, கருக்காயும் கொதிகலன் அடுப்பில் எரிக்க பயன்படுகிறது. அப்போது புகையுடன் கருக்காய் தூசுகளும் வெளியேறுகிறது. தற்போது காற்று அதிகமாக வீசுவதால் புகைப்போக்கியில் இருந்து வெளியேறும் புகை ஆலையை சுற்றியுள்ள நேதாஜி நகர், சமத்துவபுரம், குருந்தங்குளம் உள்ள குடியிருப்பு வரை காற்றில் பறக்கிறது. இவ்வாறு காற்றில் பரவும் கரித்தூள் வீடுகளில் படிகிறது. வீட்டின் மேலே உள்ள தண்ணீர் தொட்டியிலும் விழுகிறது. குடிநீரிலும் கரித்தூள் கலந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் வீடுகளில் உள்ள கதவுகளை திறந்து வைக்ககூட முடியாமல் தவிக்கின்றனர்....

போட்டோ - http://v.duta.us/OVPVfwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/YQiPVgAA