[thanjavur] - சேத கணக்கெடுப்பில் மோசடி செய்ததால் 40 சதவீதம் பேருக்கு புயல் நிவாரணம் கிடைக்கவில்லை  தரமற்ற கன்றுகள் வழங்கல்  15 ஆண்டுகள் ஆனாலும் காய்க்காது  விவசாயிகள் கவலை

  |   Thanjavurnews

பட்டுக்கோட்டை, பிப். 15: கணக்கெடுப்பில் மோசடி செய்ததால் 40 சதவீத தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. மேலும் தரமற்ற கன்றுகள் வழங்கியதால் 15 ஆண்டுகளானாலும் காய்க்காது என்பதால் விவபசாயிகள் கவலையில் உள்ளனர். கஜா புயல் கடந்தாண்டு நவம்பர் 16ம் தேதி அதிகாலை கரையை கடந்தது. இந்த புயல் ஒட்டுமொத்த டெல்டா மாவட்டத்தையே புரட்டி போட்டது. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ஊர்களில் வாழும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். தஞ்சை மாவட்டத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான தென்னை மரங்கள் முறிந்து விழுந்தது. இதுதவிர நெற்பயிர்கள், வாழை, செம்மரம், தேக்குமரங்கள் அழிந்தது. புயல் கரையை கடந்து நேற்றுடன் 90 நாட்களாகியும் பட்டுக்கோட்டை பகுதியில் தென்னை மரங்களை அப்புறப்படுத்த முடியாமல் அதே தென்னந்தோப்புகளில் பாதிக்கப்பட்ட மரங்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்தி வருகின்றனர். குறிப்பாக பட்டுக்கோட்டை அடுத்த பொன்னவராயன்கோட்டையில் உள்ள தென்னந்தோப்புகளில் விழுந்த மரங்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதோடு சாய்ந்து கிடக்கும் மரங்களை மெஷின் மூலம் அறுத்து துண்டாக்கி அப்புறப்படுத்தி வருகின்றனர். கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விவசாயிகளுக்கு இதுவரை 60 சதவீதம் மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்று விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/L8Eo1wAA

📲 Get Thanjavurnews on Whatsapp 💬