[thanjavur] - 100 ஆண்டுகளாக தரம் உயர்த்தப்படாத பேராவூரணி ரயில்வே லைன் சாலை வாகன ஓட்டிகள் அவதி

  |   Thanjavurnews

பேராவூரணி, பிப். 15: பேராவூரணியில் 100 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள ரயில்வே லைன் சாலை தரம் உயர்த்தப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேராவூரணி பேரூராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு ரயில்வே லைன் கிழக்கு தெரு, நகரின் மைய பகுதியில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ளது. இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 8, 9வது வார்டு பொதுமக்கள், பழைய பேருந்து நிலையம் அருகே துவங்கி ரயில்வே உரக்கிடங்கில் முடிவடையும் 550 மீட்டர் நீளமுள்ள பாதையை நூற்றாண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர்.

தினம்தோறும் இந்த சாலையில் பள்ளி, கல்லூரி பேருந்துகள், ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. பேராவூரணி நகரில் நெருக்கடியை தீர்க்கும் வகையில் சேது சாலையில் இருந்து புதிய பேருந்து நிலையம் மற்றும் அறந்தாங்கி செல்லும் முக்கிய இணைப்பு சாலையாகவும் இது உள்ளது.

ரயில்வே நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இச்சாலை பல ஆண்டுகளாகவே மண் சாலையாக உள்ளது. குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலை மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நின்று பயணம் செய்ய முடியாத நிலையிலும், வெயில் காலங்களில் செம்மண் தூசிகள் பறந்து அப்பகுதியில் பொதுமக்கள் குடியிருக்க முடியாத நிலையில் உள்ளது....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/BOx7FAAA

📲 Get Thanjavurnews on Whatsapp 💬