[thiruvarur] - வேறு இடத்திற்கு நிரந்தரமாக மாற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்

  |   Thiruvarurnews

மன்னார்குடி, பிப்.15: மன்னார்குடி நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு துறையினர் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அடிக்கடி தீவைப்பு சம்பவம் ஏற்படுவதால் குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு 32வது வார்டு டெப்போ ரோட்டில் ஏழு ஏக்கர் பரப்பளவில் சுமார் 35 வருடங்களுக்கு மேலாக உள்ளது. ஒவ்வொரு நாளும் நகரம் முழுவதிலும் உள்ள 33 வார்டுகளில் சேரும் 50 டன்னுக்கும் மேற்பட்ட குப்பை கூளங்கள் இந்த கிடங்கில் சேகரிக்கப்படுகிறது. இக்குப்பைக் கிடங்கை சுற்றி உள்ள பல்வேறு நகர்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். குப்பைக் கிடங்கில் சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து மக்கும் குப்பைகளை தனியாக பிரித்து உரம் தயாரிக்க போவதாகவும், மக்கா குப்பைகளை தனியாக பிரித்து திடக் கழிவு மேலாண்மை திட்டத்தின் முலம் மறுசுழற்சி செய்து பிளாஸ்டிக் சாலைகள் போடுவதற்கு பயன்படும் வகையில் பொது ஏலம் விட்டு நகராட்சிக்கு வருமானம் ஈட்டப்படும் என முன்பு சொல்லப்பட்டது. ஆனால் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கா குப்பைகளை மறு சுழற்சி செய்ய பல்வேறு இயந்திரங்கள் நகராட்சி நிர்வாகத்தால் வாங்கப்பட்டு அவைகள் பயன்படுத்தாமல் கிடப்பதாக மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் மன்னார்குடி நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்புத் துறையினர் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அடிக்கடி தீவைப்பு சம்பவம் ஏற்படுவதால் குப்பை கிடங்கை நிரந்தரமாக வேறு இடத்திற்கு மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து நகர அமமுக செயலாளர் வக்கீல் ஆனந்தராஜ் கூறுகையில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கா குப்பைகளை மறு சுழற்சி செய்ய பல்வேறு இயந்திரங்கள் நகராட்சி நிர்வாகத்தால் வாங்கப்பட்டு பயன்படுத்தாமல் துருப்பிடித்து கிடக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக பிளாஸ்டிக் கழிவுகள் தரம் பிரித்து மறுசுழற்சி செய்யாமல் மக்கும் குப்பைகளோடு கலந்து மலை போல் குவிந்து கிடக்கிறது. கோழி இறைச்சிகளை சாக்கு பைகளில் கட்டி குப்பைகளோடு சேர்ந்து கிடப்பதால் மிகக் கடுமையான துர்நாற்றத்தை அப்பகுதி மக்கள் தினமும் அனுபவிப்பது வாடிக்கையாகி விட்டது. மிகப் பெரிய குப்பைக் கிடங்கை கண்காணிப்பதற்கு குறைந்த அளவிலான துப்புரவு பணியாளர்களை மட்டும் நகராட்சி நிர்வாகம் நியமித்துள்ளது....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/_KKV6gAA

📲 Get Thiruvarurnews on Whatsapp 💬