[thoothukudi] - அனைத்து வேளாண் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி கோவில்பட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

  |   Thoothukudinews

கோவில்பட்டி, பிப். 15: கோவில்பட்டி, விளாத்திகுளம், கயத்தாறு, எட்டயபுரம், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட பல்வேறு வட்டாரங்களில் இந்தாண்டு படைப்புழு தாக்குதலால் மக்காச்சோளம் பயிர்கள் நாசமாகின. இதையடுத்து பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே காலதாமதமின்றி வழங்க வேண்டும். எட்டயபுரம் தாலுகா படர்ந்தபுளி பிர்க்காவில் உள்ள 16 கிராம மக்களுக்கு மக்காச்சோளம் பயிர் காப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும். 2017-18ம் ஆண்டுகளில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுக்கான தொகையை காலதாமதமின்றி வழங்க வேண்டும். கடந்த 2015- 18ம் ஆண்டு வரை தேசியமயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் பெற்ற அனைத்து வேளாண் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநிலத் தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி தலைமை வகித்தார். வடக்கு, மேற்கு மாவட்டத் தலைவர்கள் நடராஜன், வெள்ளத்துரை முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் திரளாகப் பங்கேற்ற விவசாயிகள், தங்களது கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்றக்கோரி கோஷமிட்டனர்....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/4RLoSgAA

📲 Get Thoothukudinews on Whatsapp 💬