[thoothukudi] - உடன்குடி ஒன்றிய பகுதிகளில் திமுக கிராமசபை கூட்டம்

  |   Thoothukudinews

உடன்குடி, பிப். 15: உடன்குடி ஒன்றிய பகுதிகளில் திமுக சார்பில் கிராமசபை சிறப்பு கூட்டங்கள் நடந்தன. இதில் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பங்கேற்றுப் பேசினார்

சீர்காட்சியில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் பாலசிங் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் வசீகரன், வர்த்தக அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரவிராஜா, நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் மகாவிஷ்ணு, இலக்கிய அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரஞ்சன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சிவபிரகாஷ், முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.

கூட்டத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பேசுகையில், ‘‘தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் அதிமுக அரசு தள்ளிப்போட்டு வருகிறது. இதனால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அடிப்படை தேவையான தெருவிளக்கு, குடிநீர், சாலை வசதிகளை முறையாக நிறைவேற்றாத நிலையில் உள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். இதே போல் மக்கள் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு முழு ஆதரவளிக்க வேண்டும்’’ என்றார்....

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/BqrFTQAA

📲 Get Thoothukudinews on Whatsapp 💬