[tiruchirappalli] - தொட்டியம் அருகே சம்பவம் கடனை கேட்டு போனில் மிரட்டியதால் கூலி தொழிலாளி மனைவி தற்கொலை

  |   Tiruchirappallinews

தொட்டியம், பிப்.15: தொட்டியம் அடுத்த மின்னத்தம்பட்டியில் கடன் கொடுத்தவர் பண த்தை திருப்பி கேட்டு மிரட்டல் விடுத்ததால் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தொட்டியம் அடுத்துள்ள மின்னத்தம்பட்டியை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. போர்வெல் லாரியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கலா (23). இவர்களுக்கு திருமணம் நடைபெற்று மூன்று வருடங்கள் ஆகிறது. இரண்டு வயதில் ஆண்குழந்தை உள்ளது. நாமக்கல்லில் லாரி உரிமையாளர் ராஜீவ்காந்தி பணம் பெற்றிருந்ததாகவும், பணத்தை கேட்டு போனில் நேற்று லாரி உரிமையாளர் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட கலா நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து காட்டுப்புத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆட்டோவை மறித்து டிரைவர் மீது தாக்குதல் : திருச்சி உறையூரை சேர்ந்தவர் அழகர்சாமி(32), ஆட்டோ டிரைவர். இவர் நேற்றுமுன்தினம் காலை 11 மணிக்கு சவாரி சென்று விட்டு நெசவாளர் திருமண மண்டபம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது 5 பேர் ஆட்டோவை நிறுத்தினர். சவாரிக்கு நிறுத்துகிறார்கள் என கருதிய அழகர்சாமி ஆட்டோவை ஓரம் கட்டினார். அப்போது திடீரென அந்த 5 வாலிபர்களும் கட்டையால் ஆட்டோவை அடித்து உடைத்து சூறையாடினர்.இதை தடுக்க முயன்ற டிரைவர் அழகர்சாமியையும் சரமாரி தாக்கினர். இதில் அவர் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ்(25), பிரகாஷ், கோபால் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மணிகண்டன் என்ற பெயருள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.வாகனம் மோதி கொத்தனார் பலி: திருச்சி திருவெறும்பூர் பகுதியில் கல்லணை கால்வாய் மற்றும் வெண்ணாற்றில் இருந்து இரண்டு சக்கர வாகனம் முதல் டாரஸ் லாரிகள் வரை மணல் திருட்டு நடக்கிறது. இதனை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அரசங்குடி பகுதியில் இருந்து திருட்டு மணல் ஏற்றி வந்த லோடு ஆட்டோ ஒன்று கூத்தைப்பார் சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் காயமடைந்தவரை அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் காயமடைந்தவர் திருவெறும்பூர் அருகே உள்ள நடராஜபுரம் கச்சேந்தி மலைப்பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(48). கொத்தனார் என்பதும், இவர் இயற்கை உபாதைக்கு ஒதுங்கியபோது விபத்து நடந்ததும் தெரியவந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். திருவெறும்பூர் போலீசார்...

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் http://v.duta.us/V52m0gAA

📲 Get Tiruchirappallinews on Whatsapp 💬